ஒரு குழந்தை பிறந்து 23 நிமிடங்களுக்குப் பிறகு இறந்ததற்கு வழிவகுத்த தவறுகளுக்காக தேசிய சுகாதார சேவையின் அறக்கட்டளைக்கு 800,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டிங்ஹாமில் உள்ள குயின்ஸ் மெடிக்கல் சென்டரில் (க்யூஎம்சி) அவசரகால சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மூளைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 15 செப்டம்பர் 2019ஆம் ஆண்டு பெற்றோர்களான சாரா மற்றும் கேரி ஆண்ட்ரூஸிற்கு பிறந்த குழந்தை இறந்தது.
900க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மூத்த மருத்துவச்சி டோனா ஒகென்டன் தலைமையில் மகப்பேறு பராமரிப்பு குறித்து பல குடும்பங்களால் கவலைகள் எழுப்பப்பட்டதை இதுதொடர்பில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இதற்காக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, நேற்று (வெள்ளிக்கிழமை) நகரின் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்ற விசாரணையில், தீங்கு மற்றும் இழப்பை ஏற்படுத்திய பாதுகாப்பான பராமரிப்பு மற்றும் சிகிச்சையை வழங்கத் தவறியதாக, தேசிய சுகாதார சேவை அறக்கட்டளை இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டது.
இதன்போது, தேசிய சுகாதார சேவையின் அறக்கட்டளைக்கு 800,000 பவுண்டுகள் அபராதம் விதித்து மாவட்ட நீதிபதி கிரேஸ் லியோங் தீர்ப்பளித்தார்.