ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று பெலராஸின் அரினா சபலெங்கா சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில், பெலராஸின் அரினா சபலெங்கா, கஸகஸ்தானின் எலெனா ரைபகினாவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
பெரும் எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், பெலராஸின் அரினா சபலெங்கா, 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் அரினா சபலெங்கா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பட்டத்தை வென்றார்.