பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் நாதிம் ஸஹாவியை அரசாங்கத்திலிருந்து பதவி நீக்கம் செய்துள்ளார்.
அவரது வரி விவகாரங்கள் மீதான விசாரணையில், அமைச்சர் சட்டத்தின் கடுமையான மீறல் கண்டறியப்பட்டதையடுத்து அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நீக்கப்பட்டார்.
அத்துடன், ஸஹாவியின் வரி விவகாரங்கள் தொடர்பான கேள்விகளை விசாரிக்க சுனக் ஒரு சுயாதீன ஆலோசகருக்கு உத்தரவிட்டார்.
அவரது வரி ஏற்பாடுகள் குறித்து விடுவிக்கப்பட்ட விசாரணையை நடத்திய பிறகு, பிரித்தானியாவின் வரி அதிகாரிகள் அவர் தனது அறிவிப்புகளில் கவனக்குறைவாக இருந்ததாகவும், ஆனால் வேண்டுமென்றே குறைந்த வரி செலுத்துவதில் தவறு செய்யவில்லை என்றும் ஸஹாவி கூறினார்.
ஈரானில் பிறந்த நாதிம் ஸகாவிக்கு எவ்வித துறையும் ஒதுக்கப்படாத நிலையில் அமைச்சராக இருந்தார். முந்தைய அரசுகளில் நிதித் துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
வருவாய் மற்றும் சுங்கத் துறைக்கு அபராதம் செலுத்த அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஸகாவியின் நிதிச் செயற்பாடுகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து, வருவாய் மற்றும் சுங்கத் துறைக்கு அபராதம் செலுத்துவது அமைச்சரின் நடத்தை மீறலுக்கு உள்ளாகுமா என விசாரணை நடத்த தனது தனிப்பட்ட ஆலோசகர் லயூரி மேக்னஸுக்கு பிரதமர் ரிஷி சுனக் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நாதிம் ஸகாவிக்கு பிரதமர் ரிஷி சுனக் எழுதிய கடிதத்தில், ‘கடந்த ஆண்டு பிரதமராகப் பதவியேற்றபோது, அனைத்து நிலைகளிலும் ஒற்றுமை, தொழில்சார் திறன், பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தை வழங்குவதாக நான் உறுதியேற்றேன். தனிப்பட்ட ஆலோசகர் மேற்கொண்ட விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், அமைச்சருக்கான நடத்தை முறைகளை மீறியிருப்பது நிரூபணமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, உங்களை (நாதிம் ஸகாவி) அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் எனது முடிவைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.