சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் 2005இல் செய்துகொள்ளப்பட்ட தென் சீனக் கடலில் எண்ணெய் ஆய்வு தொடர்பான ஒப்பந்தம் அரசியலமைப்புக்கு முரணானது என பிலிப்பைன்ஸின் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய ஸ்ப்ராட்லி தீவுகளைச் சுற்றியுள்ள நீர்நிலைகளுக்கு அருகே எண்ணெய்க்காக கூட்டய்வு செய்வதற்கு மூன்று நாடுகளைச் சேர்ந்த அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் கூட்டாக கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பில், 1987 அரசியலமைப்பின் பிரிவு 2,இல் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகளைக் கவனிக்காமல், முழு உரிமையாளரான வெளிநாட்டு நிறுவனங்களை நாட்டின் இயற்கை வளங்களை ஆராய்வதில் பங்கேற்க அனுமதித்தமை அரசியலமைப்பிற்கு விரோதமானது’ என்று பிலிப்பைன்ஸ் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம், பொது நிலங்கள், நீர், தாதுக்கள், நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் பிற கனிம எண்ணெய்கள், அனைத்து ஆற்றல் சக்திகள், மீன்வளம், காடுகள் அல்லது மரம், வனவிலங்குகள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மற்றும் பிற இயற்கை வளங்கள் அரசுக்கு சொந்தமானவை என்றும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் குறித்த தீர்ப்பு தொடர்பில், முன்னாள் பிரதிநிதி கார்லோஸ் இசகானி ஜராத்தே பிலிப்பைன்ஸின் இறையாண்மைக்கு கிடைத்த வெற்றி எனக் கூறினார்.
இந்த மனு 2008 ஆம் ஆண்டிலேயே தாக்கல் செய்யப்பட்டது. ஏனெனில் சீனா அதன் கட்டுப்பாடற்ற ஆய்வு மற்றும் ஊடுருவல் போன்றவற்றில் எமது எல்லையில், குறிப்பாக மேற்கு பிலிப்பைன்ஸ் கடலில் மறைமுகமாகப் பயன்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், ஆராய்வு என்ற சொல், அதன் சாதாரண அல்லது தொழில்நுட்ப அர்த்தத்தில் எதையாவது தேடுவது அல்லது கண்டுபிடிப்பதைக் குறிக்கிறது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், நாட்டின் இயற்கை வளங்களை, குறிப்பாக பெற்றோலியத்தை ஆராய்வது கட்டுப்பாடற்ற வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதேநேரம், சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் உடனான எண்ணெய் ஆய்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க சீனா முயன்றபோது, பிலிப்பைன்ஸ் உச்ச நீதிமன்றம் தனது முடிவை வெளியிட்டமை மேற்கண்டவாறு தெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.