ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று (வியாழக்கிழமை) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பிரசாரத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து இதன்போது ஆலோசிக்கப்படவுள்ளது.
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடலொன்று நேற்று இரவு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதற்கிடையில், தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 3வது வாரத்தில் இடம்பெறலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.