நீதிபதிகள் நியமனத்தில் தேவையில்லாமல் தாமதம் செய்ய வேண்டாம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக வழங்கும் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிப்பது மற்றும் தாமதப்படுத்துவது குறித்து தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு முடிவெடுக்காமல் தாமதப்படுத்தினால் உச்ச நீதிமன்றமே கடினமான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பதிலளிக்க அரச தலைமை வழக்கறிஞர் 10 நாட்கள் அவகாசம் கோரியுள்ள அதேவேளை விரைவில் 5 நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.