துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் ஏற்பட்ட பேரழிவுகரமான இரண்டு நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தை கடந்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, அருகிலுள்ள சிரியாவில், நாட்டின் உள்கட்டமைப்பை அழித்த பல வருட மோதல்களால் நிவாரண முயற்சிகள் சிக்கலாகிவிட்டதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக நிலநடுக்கத்திற்குப் பிறகு துருக்கிக்கும் சிரியாவுக்கும் இடையிலான பாப் அல்-ஹவா கடவை வீதிகள் மோசமாக சேதமடைந்ததால் மூடப்பட்டுள்ளது.
ஆனால், சிரியாவிற்கு உதவ மேலும் இரண்டு எல்லை வாயில்களைத் திறக்கவுள்ளதாக, , துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லு தெரிவித்தார்.
இதேவேளை, துருக்கியில் அவசர சேவைகளின் பதில் மிகவும் மெதுவாக இருப்பதாகவும், அரசாங்கம் மோசமாக தயாராக இருப்பதாகவும் விமர்சகர்கள் கூறினர்.
ஆனால், எர்டோகன் அரசாங்கம் சில சிக்கல்களை எதிர்கொண்டதை ஏற்றுக்கொண்டார், ஆனால் நிலைமை இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது என கூறினார். துருக்கியின் பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் கெமல் கிலிக்டரோக்லு இதற்கு உடன்படவில்லை.