பிரான்சும் ஜேர்மனியும் போரின் போக்கை மாற்றக்கூடியவர்கள் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸின் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மனியின் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோருடன் நேற்று (புதன்கிழமை) கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு போர் டாங்கிகள், நவீன போர் விமானங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதன் மூலம் பிரான்சும் ஜேர்மனியும் போக்கை மாற்றக்கூடியவர்களாக இருக்க முடியும.
ஜெட் விமானங்களை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறிய அவர், ஆயுதங்களை வழங்குவதற்கு மிகக் குறைவான காலமே இருப்பதாக எச்சரித்தார்.
இதேவேளை, உக்ரைன் பிரான்ஸின் ஆதரவை நம்பலாம் என்றும், உக்ரைனின் வெற்றிக்கு உதவுவதற்கும் அதன் நியாயமான உரிமைகளை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் அந்த நாடு உறுதியாக உள்ளது என்றும் மக்ரோன் கூறினார்.
இதேபோல கருத்து தெரிவித்த ஸ்கோல்ஸ், நிலை மாறவில்லை. ரஷ்யா இந்த போரில் வெற்றி பெறக்கூடாது’ என கூறினார்.
இதன் பொருள் இரு நாடுகளும் போர் விமானங்களை வழங்க உறுதியளிக்குமா என்பது இப்போதைக்கு தெளிவாக இல்லை.
ஸெலென்ஸ்கி இன்று (வியாழக்கிழமை) பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை சந்திக்கும் போது ஜெட் விமானங்களுக்கான கூடுதல் கோரிக்கைகளை விடுப்பார்.