ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரை தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது.
இதற்கமைய இன்றும், நாளையும் விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த விவாதமானது சபை ஒத்திவைப்பு விவாதமாக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தின் கொள்கைத் திட்ட அறிக்கையை சபையில் நேற்று முன்வைத்து உரையாற்றியிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.