துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட நூறாயிரக்கணக்கான மக்களுக்கு உதவ பிரித்தானியாவின் பேரிடர் அவசரக் குழு மூலம் ஒரு வேண்டுகோள் தொடங்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கம், ஆக்ஸ்பாம் மற்றும் ஆக்ஷன் எய்ட் உள்ளிட்ட பிரித்தானிய உதவி முகவர் நிறுவனங்கள் ஒன்றிணைந்து பணம் திரட்டுகின்றன.
நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்த பிறகு மருத்துவ உதவி, அவசரகால தங்குமிடம், உணவு மற்றும் சுத்தமான தண்ணீருக்கு இந்த நிதி செலவிடப்படும்.
பொதுமக்களின் நன்கொடைகளில் முதல் 5 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானிய அரசாங்கம் வழங்கும். திரட்டப்பட்ட பணம் மூலம், போர்வைகள், சூடான உடைகள் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு ஹீட்டர்களை வழங்க பயன்படும். இதேபோல ஸ்கொட்லாந்து அரசாங்கமும் 500,000 பவுண்டுகளை பங்களிக்கிறது.