புகையிரத சாரதிகள் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி புகையிரத பொது முகாமையாளரிடம் முன்வைக்கப்பட்ட பல விடயங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கப்பெறாமை மற்றும் நியாயமற்ற வரி அறவீடு தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.