• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: 331 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி நியூஸிலாந்து!

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: 331 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி நியூஸிலாந்து!

Anoj by Anoj
2023/02/18
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, இன்றைய மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 63 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், டேரில் மிட்செல் 13 ஓட்டங்களுடனும் பிரேஸ்வெல் 25 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதற்கமைய, இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் 394 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஒப்பிடுகையில், நியூஸிலாந்து அணி, 331 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

மவுன்ட் மவுங்கானுய் மைதானத்தில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹரி புரூக் 89 ஓட்டங்களையும் பென் டக்கெட் 84 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நெய்ல் வாக்னர் 4 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ மற்றும் ஸ்கொட் குகெலீஜ்ன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பிளெயர் டிக்னர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 306 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டொம் பிளெண்டல் 138 ஓட்டங்களையும் கோன்வே 77 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரொபின்சன் 4 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் பிரோட், ஜெக் லீச் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 19 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி, 374 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதற்கமைய இங்கிலாந்து அணி, நியூஸிலாந்து அணிக்கு 394 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 57 ஓட்டங்களையும் ஹரி புரூக் 54 ஓட்டங்களையும் பென் போக்ஸ் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மைக்கேல் பிரெஸ்வல் மற்றும் பிளாயர் டிக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் நெய்ல் வாக்னர் மற்றும் ஸ்காட் குகெலிஜ்ன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 394 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, இன்றைய மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 63 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்னமும் 5 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தை நியூஸிலாந்து அணி, நாளை தொடரவுள்ளது.

Related

Tags: இங்கிலாந்து அணிடெஸ்ட் போட்டிநியூஸிலாந்துமைக்கேல் பிரெஸ்வல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிவராத்திரியன்று மாட்டுக் கன்றின் தலையை வெட்டி வீசிய விஷமிகள் !!!

Next Post

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் – ஊடக அமைப்புக்கள் கோரிக்கை

Related Posts

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
கிரிக்கெட்

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!
கிரிக்கெட்

LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!

2026-05-06
சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!
ஆசிரியர் தெரிவு

சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!

2026-05-06
கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!
உதைப்பந்தாட்டம்

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!

2026-04-30
வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

2026-04-30
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!
கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!

2026-04-29
Next Post
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் – ஊடக அமைப்புக்கள் கோரிக்கை

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் - ஊடக அமைப்புக்கள் கோரிக்கை

துருக்கி நிலநடுக்கம்: கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு சடலமாக கண்டெடுப்பு!

துருக்கி நிலநடுக்கம்: கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு சடலமாக கண்டெடுப்பு!

மே மாதத்தில் க.பொ.த. சாதாரண தரத்திற்கான செயன்முறை பரீட்சை !!

சாதாரண தரப் பரீட்சை குறித்து பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!!!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.