துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு தனது வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் இறந்து கிடந்ததை அவரது முகவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கானா தேசிய வீரரான 31 வயது கிறிஸ்டியன் அட்சு, பிரீமியர் லீக் அணிகளான எவர்டன், செல்சியா மற்றும் நியூகேஸில் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
பெப்ரவரி 6ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து அட்சுவை காணவில்லை, தற்போது இது ஹடேயின் அன்டாக்யாவில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு இடிபாடுகளில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபிய அணி அல்-ரேட் உடனான ஒரு சீசனுக்குப் பிறகு செப்டம்பர் 2022இல் துருக்கிய அட்சு ஹடாய்ஸ்போரில் சேர்ந்தார் மற்றும் பெப்ரவரி 5ஆம் திகதி சுப்பர் லீக் போட்டியில் வெற்றி கோலை அடித்தார்.
‘எங்கள் சோகத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. உன்னை மறக்க மாட்டோம் அட்சு’ என அவரது துருக்கிய ஹடாய்ஸ்போர் கழக அணி இரங்கல் வெளியிட்டுள்ளது.
கானா அணிக்காக 65போட்டிகளில் விளையாடியுள்ள அட்சு, 2015ஆம் ஆண்டு ஆபிரிக்க நாடுகளின் கிண்ண தொடரில், அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற மிக முக்கிய வீரராக இருந்தார். கானா அணி, கோஸ்டிடம் பெனால்டியில் தோற்றது. அட்சு, சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.