நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளும் மூன்றாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜனவரி 23 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகி, கடந்த 17 ஆம் திகதியுடன் நிறைவடைந்தன.
இதற்கமைய ஜனவரி 20 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய இன்று திங்கள் முதல் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகி , மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.