ஜம்மு-காஷ்மீா் மக்களிடம் இருந்து ஜனநாயக உரிமைகளை மத்திய அரசாங்கம் பறித்துவிட்டது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
ஒரே மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீரை மக்களின் விருப்பத்துக்கு மாறாக 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்து ஜனநாயக உரிமையை பறித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக மற்றும் நீதியை நிலைநிறுத்த காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.