பைடனின் விஜயம் குறித்து பாத் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு நிபுணரும், முன்னாள் நேட்டோ ஆய்வாளருமான டாக்டர் பேட்ரிக் புரி, கருத்து தெரிவித்துள்ளார்.
பைடனின் விஜயம் ‘நாங்கள் நீண்ட காலத்திற்கு உக்ரைனுடன் இருக்கிறோம்’ என்ற நேட்டோ கூட்டாளிகளின் உறுதிப்பாடாகும்.
‘பின்வாங்கப் போவதில்லை என்று அவர்கள் விளாடிமிர் புடினுக்கு சமிக்ஞை செய்கிறார்கள், எனவே இந்த போரில் எங்களை மிஞ்ச முயற்சிப்பது குறித்த உங்கள் அடிப்படை அனுமானங்களை நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்’ என கூறினார்.
பிப்ரவரி 24 அன்று ஓராண்டு நிறைவில், ரஷ்ய குண்டுவெடிப்பு அபாயங்கள் அதிகரிப்பு அச்சத்தால் முன்கூட்டியே இந்த பயணம் அமைந்துள்ளது.
போரின் போது உக்ரைனின் தைரியத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பாராட்டியுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியுடன் அவர் ஆற்றிய உரையில், அவர் துணை ஜனாதிபதியாக பணியாற்றியபோது ஆறு முறை உக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டதையும் நினைவுக்கூர்ந்தார்.
மேலும், ‘நான் திரும்பி வருவேன் என்று எனக்குத் தெரியும்’ என்று அவர் கூறினார்.
முன்னதாக, அமெரிக்கா 500 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள புதிய இராணுவ உதவிப் தொகுப்பை உக்ரைனுக்கு வழங்கும் என்று கூறினார், அது நாளை அறிவிக்கப்படும்.
ஊடக கூட்டறிக்கையில், ஸெலென்ஸ்கி கூறுகையில், ‘ஜனநாயக உலகம் இந்த வரலாற்றுப் போரில் வெற்றிபெற வேண்டும். அமெரிக்க-உக்ரைன் உறவுகளின் முழு வரலாற்றிலும் இது மிக முக்கியமான வருகை. நாங்கள் ஏற்கனவே அடைந்த முடிவுகளை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இன்று எங்கள் பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இந்த விஜயத்தின் முடிவுகள் நிச்சயமாகப் போர்க்களத்தில் ஒரு பிரதிபலிப்பைக் கொண்டிருக்கும். ஜனவரியில் உக்ரைனுக்கு ஆப்ராம்ஸ் டாங்கிகளை வழங்குவதற்கான அமெரிக்க முடிவு ஏற்கனவே உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்த பங்களித்துள்ளது.
உக்ரைனுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க ஆதரவுத் தொகுப்பு இருக்கும் என்று எனக்குத் தெரியும்… ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பே இல்லை என்பதற்கான தெளிவான சமிக்ஞையை அளிக்கிறது. உக்ரைன் பைடனுக்கு நன்றியுடன் இருக்கிறது’ என கூறினார்.
ஒரு ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னதாக, ஜோ பைடன், உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியுடன் அரையில் அமர்ந்து, அவருடன் உலகைப் பற்றி விவாதிக்க ஆவலுடன் காத்திருப்பதாக கூறினார்.
இராணுவ அனுபவம் இல்லாத போதிலும் உக்ரைன் குடிமக்களின் வீர சண்டைக்காக அவர் பாராட்டினார்.
மேலும், ‘உக்ரைன் மக்கள், சாதாரண, கடின உழைப்பாளி குடிமக்கள், இராணுவத்தில் ஒருபோதும் பயிற்சி பெறாதவர்கள், ஆனால் அவர்கள் முன்னேறிய விதம் வீரத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் முழு உலகமும் அப்படி நினைக்கிறது’ என கூறினார்.
உக்ரைனுக்கு பைடனின் ரகசியப் பயணம் போலந்து எல்லையில் இருந்து ரயில் வழியாக மேற்கொள்ளப்பட்டதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புக் காரணங்களால் கிவ் விஜயம் இரகசியமாகவே இருந்தது. சனிக்கிழமை இரவு ஒரு உணவகத்தில் அவரும் அவரது மனைவி ஜிலும் ஒரு அரிய விருந்து உட்கொண்ட பிறகு பைடன் எந்த அறிவிப்பும் இல்லாமல் அமெரிக்காவை விட்டு வெளியேறினார் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.
ழுவதும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்த நேரத்தில், மத்திய கிவ்வில் உள்ள செயின்ட் மைக்கேல் கதீட்ரலில் இருந்து இருநாட்டு தலைவர்களும் வெளியேறியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி பைடன் ஒரு அறிக்கையில், ‘கிவ் விஜயம் உக்ரைனின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றில் எங்களின் அசைக்க முடியாத மற்றும் உறுதியான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும்.
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு புடின் தனது படையெடுப்பைத் தொடங்கியபோது, உக்ரைன் பலவீனமாக இருப்பதாகவும், மேற்கு நாடுகள் பிளவுபட்டிருப்பதாகவும் அவர் நினைத்தார். ஆனால் அவர் தவறு செய்துவிட்டார்’ என்று அவர் கூறினார்.
மேலும், ‘பாதுகாப்புக்கு உதவ பீரங்கி வெடிமருந்துகள், கவச எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் விமான கண்காணிப்பு ரேடார்கள் உள்ளிட்ட முக்கிய உபகரணங்களை அவர் அறிவிப்பார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பைடனின் வருகை தீவிர பாதுகாப்பு கவலைகள் காரணமாக ரகசியமாக வைக்கப்பட்டது, ஆனால் இன்று காலைதலைநகர் கிவ்வில் பல்வேறு வீதிகள் மூடப்பட்டன
உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி கடந்த சில நிமிடங்களில் தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் கணக்கில் அமெரிக்க ஜனாதிபதியுடன் கைகுலுக்கும் படத்தைப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இன்று (திங்கட்கிழமை) உக்ரைனுக்கு திடிர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடாவை சந்திப்பதற்காக அவர் அண்டை நாடான போலந்திற்குச் சென்றிருந்த நிலையில், தனது திட்டமிட்ட நிகழ்சி நிரலுக்கு மாறாக அவர் உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கு சென்றுள்ளார்.
உக்ரைனிய தலைநகருக்கு ஒரு முக்கியமான விருந்தினர் வருகிறார் என்று இன்று முன்னதாக ஊகங்கள் இருந்தன, உக்ரைனிய அரசியல்வாதியான லெசியா வாசிலென்கோ பைடன் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யா படையெடுப்பு ஓராண்டு நிறைவை எட்டவுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த விஜயம் அமைந்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், மற்றும் முன்னாள் பிரதமரான பொரிஸ் ஜோன்ஸன் உள்ளிட்ட தலைவர்கள் உக்ரைனுக்கு விஜயம் செய்திருந்த நிலையில், தற்போது பைடனுக்கு அங்கு விஜயம் செய்துள்ளார்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனில் நடந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தில் 107 பேர் கொல்லப்பட்டதை நினைவுகூரும் நாளில் அவர் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியை சந்திக்கிறார்.