ஐரோப்பாவிலும் ஆபிரிக்காவிலும் மோசமான வானிலையால் பிரித்தானிய பல்பொருள் அங்காடிகளுக்கு தக்காளி உட்பட சில பழங்கள் மற்றும் காய்கறிகளின் விநியோகம் தடைபட்டுள்ளது.
கடினமான வானிலையால் அறுவடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய சில்லறை வணிகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பல்பொருள் அங்காடிகளில் உள்ள காலி அலமாரிகளின் ஏராளமான படங்கள், சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
தற்காலிக விநியோக சவால்கள் இருப்பதாக தொழில்துறையின் ஆதாரங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்களில், தக்காளி பற்றாக்குறை குறிப்பாக குறிப்பிடத்தக்கதாக தோன்றுகிறது.
குளிர்கால மாதங்களில் நாம் உட்கொள்ளும் தக்காளிகளில் குறிப்பிடத்தக்க அளவு மொராக்கோ மற்றும் தெற்கு ஸ்பெயினில் வளர்க்கப்படுகிறது. இரு பகுதிகளும் சமீபத்தில் வெப்பமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. இது பயிர் விளைச்சலைப் பாதித்தது.