பத்தரமுல்ல கல்வி அமைச்சுக்குள் நுழைந்து போராட்டமொன்றை முன்னெடுத்த 30க்கும் மேற்பட்ட மாணவர் பிக்குகள் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம், பத்தரமுல்ல கல்வி அமைச்சுக்குள் நுழைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் திறக்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பிக்குகள் குழுவொன்று பேரணியாக வந்து கல்வி அமைச்சுக்குள் பிரவேசித்து வளாகத்தில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.