தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சிற்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் தினங்களில் இதுதொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எதிராக, எதிர்வரும் தினங்களில் வழக்கு தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே போன்று அரச அதிகாரிகள் தேர்தலை நடத்துவதில் தடையாக செயற்படுகின்றமை தொடர்பிலும் நடவடிக்கை எடுப்போம் எனவும் மக்களின் வாக்குரிமையை பாதுகாத்து இறையான்மையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் மேலும் கூறினார்.
இதனிடையே அதே போன்று தேர்தல் தொடர்பாக நீதிமன்ற உதரவுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்படாது என அறிவித்த ஜனாதிபதிக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.