ரஷ்யாவின் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பின் ஓராண்டு நிறைவையொட்டி ரஷ்யாவிற்கு எதிரான பத்தாவது பொருளாதார தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சமீபத்திய சுற்றுத் தடைகள் ரஷ்யா மீதான கூடுதல் வர்த்தகக் கட்டுப்பாடுகளை வழங்குகிறது. இதனை சுவிடன் ஐரோப்பிய சபையின் தலைமையகம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை பிரஸ்ஸல்ஸில் அறிவித்தது.
மேலும், இந்த தடைகள், போருக்கு நிதியளிப்பதை மிகவும் கடினமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுப்பில் இரட்டை பயன்பாட்டு பொருட்கள் தொடர்பான கடுமையான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் ரஷ்யாவின் போரை ஆதரிக்கும் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள், படையெடுப்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தல் மற்றும் உக்ரைனை தாக்க ரஷ்யா பயன்படுத்தும் ஆளில்லா விமானங்களை வழங்குதல் ஆகியவை அடங்கும்.
மேற்கத்திய நாடுகள் ரஷ்ய பிரச்சாரகர்கள் என்று கூறுவது, உக்ரைனிய குழந்தைகளை ரஷ்யாவிற்கு நாடு கடத்துவதற்குப் பொறுப்பானவர்கள் மற்றும் போரின் முன் வரிசையில் நிறுத்தப்பட்ட ஈரானிய ஆளில்லா விமானங்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட அதிகமான நபர்களை தடுப்புப்பட்டியலில் சேர்க்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தனியார் அல்ஃபா வங்கி மற்றும் ஆன்லைன் வங்கி டின்ங்ஓஃப் உட்பட பல ரஷ்ய வங்கிகளை உலகளாவிய அமைப்பான ஸ்விப்ட்டிலிருந்து துண்டிக்கவும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தகத்தை 10 பில்லியன் யூரோக்கள் குறைக்கவும் இந்த தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.