தெற்கு இத்தாலிக்கு அப்பால் உள்ள மிகமோசமான கடலில் படகு மூழ்கியதில் 12 குழந்தைகள் உட்பட குறைந்தது 59 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர்.
கலாப்ரியா பகுதியில் உள்ள கடற்கரை நகரமான குரோடோன் அருகே படகை தரிக்க முற்பட்டபோது கப்பல் உடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
படகில், குறைந்தது 150பேர் இருந்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர். அவர்களில் பலர் கடினமான சூழ்நிலையில் இருந்து வெளியேறி வருவதாக இத்தாலியின் ஜனாதிபதி கூறினார்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட உள்துறை அமைச்சர் மேட்டியோ பியாண்டோசி, இன்னும் 30பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என்று கூறினார்.
இறந்தவர்களில் சில மாதங்களே ஆன குழந்தை ஒன்றும் இருப்பதாக இத்தாலியின் அன்சா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடற்கரையில் இருந்து அருகிலுள்ள கடலோர ரிசார்ட்டில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. கடலோர காவல்படையினர் 80பேர் உயிருடன் காணப்பட்டதாக தெரிவித்தனர்,
பல நாட்களுக்கு முன்பு துருக்கியில் இருந்து புறப்பட்ட படகில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆபிரிக்காவிலிருந்து இத்தாலியில் ஏராளமான மக்கள், மோதல் அல்லது வறுமை காரணமாக தஞ்சமடைகின்றனர்.