துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட நிலநடுக்கம் மலாத்யா மாகாணத்தில் உள்ள யெசிலியூர்ட் நகரத்தை மையமாகக் கொண்டது என்று நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மூன்று வாரங்களுக்கு பிறகு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 5.6 ரிக்டர் அளவுகோளில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் திகதி தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவின் சில பகுதிகளை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 11 துருக்கிய மாகாணங்களில் மாலத்யாவும் ஒன்று.
இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னைய நிலநடுக்கங்களில் இருநாடுகளிலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரம் மக்கள் தங்களை வீடுகளை இழந்துள்ளனர். 1,73,000 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
அத்துடன் கடந்த 6ஆம் திகதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட பின்அதிர்வுகள் ஏற்பட்டதாகக் துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியது.