இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக இந்தியா வருகை தரவுள்ளார்.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இந்தியா வரும் பிரதமருடன், அந்நாட்டு துணை பிரதமர் மற்றும் உயர்மட்ட குழுவினரும் வருகை தரவுள்ளதாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின்போது, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டுக்கு பிறகு இத்தாலி பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.