ராஜபக்ஷ அரசாங்கமும், ராஜபக்ஷ நிழல் அரசாங்கமும் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீரழித்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ரக்வான கொடகவெல பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மனிதாபிமான முதலாளித்துவமும் சமூக ஜனநாயகமும் மட்டுமே இந்நேரத்தில் நாட்டிற்கு ஒரே வழி, ஒரே ´பதில்´ எனவும், அனைவருக்கும் பயனளிக்கும் வளமான சகாப்தத்தை உருவாக்கி, கிராமத்தை கட்டியெழுப்பி நாட்டைக் கட்டியெழுப்பும், நகரத்தைக் கட்டியெழுப்பி நாட்டைக் கட்டியெழுப்பும் புதிய எண்ணக்கருவாகும் எனவும், இதற்காக மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
ஒரு நாடாக, தொழில்நுட்பம், அறிவு மற்றும் புதிய முறைமைகளின் அடிப்படையிலையே நாம் முன்னேற வேண்டும் எனவும், அறிவு மற்றும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தின் ஊடாக ஏற்றுமதி ஊக்குவிப்பு முதலீட்டுத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.