பயணிகள் பேருந்துகளை இயக்கியபோது போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதை அடுத்து, எட்டு சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள், தேசிய போக்குவரத்து மருத்துவ அதிகாரிகளுடன் இணைந்து நேற்று (19) இந்த கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் நடைபெற்ற இந்த நடவடிக்கையின்போது, பயணிகள் பேருந்துகளில் பணிபுரியும் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பரிசோதிக்கப்பட்டதோடு, போதைப்பொருள் பழக்கத்தில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் 9 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதான சந்தேக நபர்கள் 35 முதல் 57 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
களுத்துறை தெற்கு பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.













