மோசமான நிதி நெருக்கடியை இலங்கை கடந்து வரும் நிலையில், இந்த ஆண்டு நாட்டின் பொருளதார வளர்ச்சி 3 சதவீதத்தால் சுருங்கும் என மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிதி நெருக்கடியானது அதன் அந்நிய செலாவணி கையிருப்பில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள போதும், பொருளாதார வளர்ச்சி 2024இல் மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேநேரம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் கடன் இம்மாதம் 20 ஆம் திகதி அங்கீகரிக்கப்படலாம் என்றும் இது ஒரு சாதகமான வரவு என்றும் மூடிஸ் கூறியுள்ளது.
மேலும் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இதனால் கடனாளிகளுக்கு இழுபறி ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ள மூடிஸ், நீடித்த பேச்சுவார்த்தை வெளிப்புற நிதியுதவிக்கான அணுகலை ஆபத்தில் ஆழ்த்தலாம் எனவும் கூறியுள்ளது.
அத்தோடு தனியார் கடனாளிகளுக்கு அதிக இழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.