மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வை தொடர்ந்து குறித்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தச் சென்ற மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்து நேற்றைய தினம்(திங்கட்கிழமை) மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள்,கி ராம அலுவலகர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தமது கடமையை உரிய முறையில் முன்னெடுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டிருந்தது.
மேலும் அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு எற்படுத்துகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
குறிப்பாக மாந்தை மேற்கு பிரதேசத்தில் தொடர்ச்சியாக இயற்கை வளங்கள் அழிவடைந்து, அழிக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரச உத்தியோகத்தர்களுக்கு உள்ளது. மக்களும் எங்களுடன் இணைந்து இயற்கை வளங்களை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும் அரச உத்தியோகத்தர்கள் தமது கடமையை மேற்கொள்ளும் போது அதற்கான கௌரவத்தையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டக்காரர்கள் முன் வைத்தனர்.