பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிற்கு மூன்று மாத கால சேவையை நீடிப்பதற்கான தீர்மானத்தை அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பி வைத்துள்ளார்.
அரசியலமைப்பு பேரவை இன்று(வெள்ளிக்கிழமை) கூடவுள்ளதாகவும், அங்கு இது தொடர்பில் பரிசீலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 25ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது.
இலங்கையின் 33வது பொலிஸ் மா அதிபராக இருந்த விக்கிரமரத்ன, நவம்பர் 27, 2022 தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.