சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை எதிர்க்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை சீர்செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தைவிட்டால் வேறு வழியில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், உரிய வகையில் கொடுக்கல் – வாங்கல் இடம்பெறாமை குறித்து தங்களுக்கு விமர்சனம் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்கு சிலர் முற்படுகின்றனர் எனவும், ஆனால் அவர்களிடம் திட்டம் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.