பொருளாதார மீட்சி மற்றும் அதற்கான முயற்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
தேசத்தை புத்துயிர் பெறச் செய்வதற்கான பயனுள்ள மற்றும் உண்மையான முயற்சிகளுக்கு ஆதரவை வழங்கினாலும் கட்சித்தாவல் என்ற தகவல்கள் பொய்யானவை என்றும் கூறினார்.
மேலும் ஊழலுக்கு எதிரான சட்டமூலம் விரைவில் கொண்டு வரப்படும் என அரசாங்கம் உறுதியளித்த போதிலும் அதில் ஏற்படும் தாமதத்திற்கு காரணம் என்னவென்றும் கேள்வியெழுப்பினார்.
அத்தோடு ஊழல்வாதிகள் குறித்து வெளிவந்த 100 ஆவணங்கள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வியெழுப்பினார்.