சில எதிர்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்தில் ஆளும் கட்சியுடன் இணையவுள்ளதாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு பிரதேசத்தில் உள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இவ்வாறு அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
குமார வெல்கம மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் இவ்வாறு ஆளுங்கட்சியுடன் இணைய தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சி சில்வாவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் பதுளை மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது.
எதிர்க்கட்சியின் சுயாதீன குழுக்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய நாடாளுமன்றம அமர்வில் விசேட தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.