2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.
மேலும், தேர்தல்கள் ஆணைக்குழு, பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு முன்னர் கடிதம் ஒன்றை அனுப்பி கலந்துரையாடலுக்கான அனுமதியை கோரியிருந்தது.
இந்நிலையில் இந்த கலந்துரையாடல் இந்த வாரத்தில் நடத்தப்பட உள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் ஆணைக்குழு கூடி தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கும் என பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.