சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘அரசியலமைப்பின் 21ஆம் திருத்தம் அதேபோன்று புதிய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நாட்டின் எதிர்கால திசையை தீர்மானிக்கும் புதிய சட்டமாக அறிமுகப்படுத்தலாம்.
அத்துடன் புதிய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் ஊடாக தேவையான எந்த சந்தர்ப்பத்திலும் சட்டமா அதிபரின் ஆலாலோனையை பெற்றுக்கொள்ள முடியுமாகிறது.
சட்ட ஆலாலோனை மற்றும் சட்ட உதவி பெற்றுக்கொடுப்பதற்கும் தேவையான அதிகாரம் சட்டமா அதிபருக்கு வழங்கி இருக்கிறது.
தற்போது செயற்படும் இலஞ்ச ஆணைக்குழு ஆணையாளர்களாக நியமிக்கப்படுவது ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளாகும்.
அந்த முறையை மாற்றி செயற்திறமையுடன் பொறுபுக்கூறக்கூடிய இலஞ்ச ஆணைக்குழு சபை ஒன்றை அமைக்கும் நோக்கில் தகுதிவாய்ந்த சேவையில் இருக்கும் அரச அதிகாரிகள் மற்றும் சிவில் பிரதிநிதிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் சுயாதீனம் என தெரிவிப்பதன் மூலம் மாத்திரம் தேவையற்ற சுதந்திரத்தை ஆணைக்குழுக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாது.’ என தெரிவித்துள்ளார்.