உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று (திங்கட்கிழமை) முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் பிரதமர் நடத்தும் கலந்துரையாடல் முற்பகல் 11.30 மணிக்கு கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதமர், இந்த விசேட கலந்துரையாடலின் போது அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தமது கோரிக்கைகளுக்கு நல்ல பதில் கிடைக்காத பட்சத்தில் நாளை தேர்தலை ஒத்திவைப்பதற்கான அறிவிப்பை, தேர்தல் ஆணைக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த மார்ச்சில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் இம்மாதம் 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட போதும் அதற்குரிய நிதி விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.