அமெரிக்காவின் இரகசிய ஆவணங்களை வெளியிட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் விமானப்படையின் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 21 வயதுடையவர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் இணையதள சூதாட்ட குழு ஒன்றின் தலைவர் என்பதும் தெரியவந்துள்ளது.
உளவு பார்த்தல் மற்றும் ரகசிய பாதுகாப்பு தகவல் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.