அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரைக் களமிறக்கி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிவாகை சூடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த பொதுவேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவாகக் கூட இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ரணிலுக்கு உதவுவதற்கு தனிப்பட்ட ரீதியில் தான் தயார் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் வராது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.