ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்சபைக் கூட்டம் சட்டவிரோதமானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் மீண்டும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மொட்டு கட்சியின் புதிய தவிசாளர் நியமனம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடந்த சனிக்கிழமை நடத்திய பொதுச்சபைக் கூட்டம் சட்டவிரோதமானது என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன்.
கூட்டத்தின் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் செல்லுபடியற்றவையாகும். நீதிமன்றம் ஊடாக இதனை நாம் நிரூபிப்போம்.
கிராமங்களில் மரண சங்க கூட்டத்தை நடத்துவதற்குகூட நடைமுறைகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.