சீனாவிலிருந்து மீன் இறக்குமதியை நிறுத்துவதற்காக கலால் வரிச் சட்டம் 2015ஐ திருத்துவதற்கான சட்டமூலத்தினை கென்யாவின் அலெகோ உசோங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சாமுவேல் அடாண்டி, அறிமுகப்படுத்தவுள்ளார் என கென்யாவை தளமாகக் கொண்ட தி ஸ்டார் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
தேசிய சட்டமன்ற சபாநாயகர் மோசஸ் வெட்டங்குலாவுக்கு எழுதிய கடிதத்தில், மேற்படி சட்ட திருத்தம் இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கு சுங்க வரியின் 20சதவீதவீதத்தில் கலால் வரியை அறிமுகப்படுத்தும்.
தற்போது, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மீன்களை விட மலிவானவை.
இந்த மலிவான மீன் இறக்குமதி உள்ளுர் தொழிலை மோசமாக பாதிக்கிறது. கடற்தொழிலில் வேலை இழப்புக்கு வழிவகுக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மீன்பிடித்தல், மீன் வளர்ப்பு மற்றும் விற்பனை மூலம் மீன் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 1.2மில்லியன் மக்கள் வேலை செய்கிறார்கள் என அடண்டி மதிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு கலால் வரி விதிக்கப்படுகிறது. மேலும் கென்யாவில் கலால் வரிக்கு உட்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் பட்டியல் கலால் வரிச்சட்டம், 2015 இன் முதல் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் விளைவுகளால் 2020ஆம் ஆண்டைத் தவிர்த்து, சமீபத்திய ஆண்டுகளில் மீன் இறக்குமதியின் மதிப்பு சீராக உயர்ந்து வருவதாக அறிக்கைகள் காட்டுகின்றன.
விக்டோரியா ஏரி போன்ற முக்கிய உள்ளூர் ஆதாரங்களில் இருந்து பங்குகள் குறைந்து வருவதால், வளர்ந்து வரும் பற்றாக்குறையை ஈடுசெய்ய இறக்குமதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.