திபெத்திய ஆசிரியரும் திபெத்திய பௌத்தத்தின் தியான குருவுமான யோங்கே மிங்யுர் ரின்போச் உலகளாவிய பௌத்த உச்சிமாநாடு பௌத்தத்தின் சாரத்தை உலகுக்குப் பரப்ப உதவும் என்றுதெரிவித்துள்ளார்.
‘இந்த நிகழ்வின் மூலம், புத்த தர்மத்தின் சாரத்தை உலகிற்கு பரப்புவதற்கு நாம் உண்மையிலேயே உதவ முடியும்’ என புதுடில்லியில் நடைபெற்ற மாநாட்டில் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்த சந்திப்பில் கலந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் நாங்கள் ஒரு வித்தியாசமான பாரம்பரியம், வித்தியாசமான பரம்பரையுடன் சந்திக்கின்றோம். எனவே, நாங்கள் நிறைய கற்றுக்கொள்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பௌத்த தர்மம் இந்தியாவில் இருந்து பிறந்தது. முக்கிய செய்தி விழிப்புணர்வு, அன்பு, இரக்கம் மற்றும் ஞானம் பற்றியதாகும். பௌத்தத்தைப் பொறுத்த வரையில் இந்தியாவும் நேபாளமும் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன.
ஏனெனில் அவை அண்டை நாடுகளாக உள்ளன. இதனால் பௌத்தம் இரு நாடுகளையும் ஒன்றிணைக்கிறது. புத்த தர்மம் திபெத்தில் வந்தது, இந்தியாவை நாம் தந்தை போன்றது, நேபாளம் தாய் போன்றது என்று அவர் குறிப்பிட்டார்.
‘நாங்கள் இந்தியாவிலிருந்து, நேபாளத்திலிருந்து நிறைய போதனைகளைப் பெறுகிறோம். புத்தர் நேபாளத்தில் பிறந்தார். ஆனால் புத்தர் இந்தியாவைச் சுற்றி, பல, பல இடங்களில் மதத்தை போதித்தார்’ என்று அவர் சுட்டிக்காட்டினார்.
உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டில் பங்கேற்ற திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, ஞானம் மற்றும் இரக்கத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.