பாகிஸ்தானில் உள்ள நிலக்கரி மின் நிலையங்களில் இருந்து 490 மில்லியன் தொன் பெறுமதியான வெவ்வேறு பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படுவதால் நாட்டின் மொத்தக் காற்று மாசுபாட்டை தோற்றுவித்துள்ளது.
தேசிய சட்டமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட காலநிலை மாற்ற அமைச்சின் ஆவணத்தின்படி, எரிசக்தி, மின்சார உற்பத்தி மற்றும் நிலக்கரியில் இருந்து மின்சாரம் உற்பத்தி போன்ற உட்பட பல்வேறு துறைகளில் இருந்து உமிழ்வுகள் வருகின்றன.
மின் உற்பத்தியில் 53.40மில்லியன் தொன் எரிசக்தித் துறையின் உமிழ்வுகள் உள்ளன, அதேநேரத்தில் நிலக்கரி மூலம் எரியும் மின்சார உற்பத்தி 8.05 மில்லியன் தொன்கள் உள்ளன.
இந்த பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வுகளுக்கு மேலதிகமாக, நிலக்கரி மின் உற்பத்தியானது சல்பர் டை ஒக்சைட், நைட்ரஜன் ஒக்சைட் மற்றும் துகள்கள் குறுகிய கால காற்று மாசுபடுத்திகளையும் வளிமண்டலத்தில் வெளியிடுகிறது
இப்பிரச்சினைக்கு தீர்வு காண, காலநிலை மாற்ற அமைச்சு தேசிய சுத்தமான காற்று கொள்கையை அறிமுகப்படுத்தியது.
அக்கொள்கையின்படி, நாட்டின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து புகை மூட்டம் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை சமாளிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், காற்று மாசுபாட்டினால் ஏற்படும் ஆண்டு இறப்புகளைக் குறைத்தல், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் ஆகியவை இதன் நோக்கமாகும்.
காலநிலை மாற்றத்துக்கான அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான், கடந்த 20 ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் பத்து நாடுகளில் பாகிஸ்தான் உலக அளவில் இடம்பிடித்துள்ளதாகவும், அதன் புவியியல் இருப்பிடம் காரணமாக பாகிஸ்தான் 0.53 சதவீதத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக தகுந்த மூலோபாயம் உருவாக்கப்படாவிட்டால், பாகிஸ்தான் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.1 சதவிகிதம் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும்.
வறண்ட நாட்கள் அதிகரிப்பு மற்றும் விவசாய உற்பத்தியில் 77 சதவீதம் குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.