ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினை இன்று(புதன்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சந்தித்து பேசவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது தனது கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தால், அவருக்கு ஆதரவளிக்க தயார் எனவும் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற மே தினக்கூட்டத்தில் உரையாற்றிய வடிவேல் சுரேஷ், சஜித் பிரேமதாஸவுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட தயார் இல்லை என அறிவித்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.