தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கதினரால் முன்னெடுக்கப்பட்டிருந்த அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று (புதன்கிழமை)யும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.
இதற்கமைய இன்றும் 5 புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஒருவரை, பிரதி வணிக பொதுமுகாமையாளர் பதவிக்கு தெரிவு செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.