க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரத்தியேக மற்றும் மேலதிக வகுப்புக்களுக்கு தடை தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதற்கு மேலதிகமாக, மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல், பதாகைகள், கையேடுகள், இலத்திரனியல் அல்லது அச்சிடப்பட்ட ஊடகங்கள் மூலம் பரீட்சை வினாக்களை விளம்பரப்படுத்துதல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ இந்த உத்தரவை மீறினால் அது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய எதிர்வரும் 29 முதல் ஜூன் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.