கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்VIP பயணிகள் முனையத்தில் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு விசேட கவனம் செலுத்துமாறு பணிப்புரைகள் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
நிதியமைச்சிடம் இருந்து இந்த அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய தற்போது உரிய பரிசோதனைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தை மக்கள் தொடர்ந்தும் துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.