சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிக உதவிகளை செய்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு செய்ததை விட இந்தியா பாரியளவில் பங்களிப்பை வழங்கியது என்றும் இலங்கைக்கு விஜயம் செய்தால் இந்த நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கண்டுகொள்ள முடியும் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவுடனான தற்போதைய உறவுகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அண்டை நாடுகளை பரந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது மரபு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அண்டை நாடுகள் இந்தியாவின் பொருளாதாரத்திலிருந்து பயனடைகிறார்கள் என்றும் அவ்வாறே கடந்த ஆண்டு,பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீளுவதற்கு உதவிகளை புரிந்துள்ளது.
இதேநேரம் சீனாவுடனான இந்தியாவின் உறவு மிகவும் சிக்கலானது என குறிப்பிட்டுள்ள அவர், இரு நாடுகளும் பரஸ்பர மரியாதை, அமைதி என்பவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.