பங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெற்ற பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதத்திற்குள் செலுத்துமென என இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை 2021 ஆம் மே மாதத்தில் பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலரை கடனாகப் பெற்றுக்கொண்டது.
பெற்ற கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாடு கடனைத் திருப்பிச் செலுத்தத் திட்டமிடப்பட்டது, ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டிருந்தது.
இதேவேளை ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத்தில் குறித்த கடனை செலுத்திவிடுவோம் என பங்ளாதேஷுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம் எனவும் அவர் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.