இம்மாத இறுதி வரை மரக்கறிகளின் விலைகள் உயர்வாக இருக்கும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மரக்கறிகளின் விலையேற்றம் காரணமாக, நுகர்வோர் மாற்று வழிகளில் ஈடுபடுவதுடன், கடந்த காலங்களில் சந்தையில் மரவள்ளிக்கிழங்கு மற்றும் பலாக்காய்களுக்கு அதிக கேள்வி காணப்பட்டது.
அந்த தேவையுடன் சந்தையில் ஒரு கிலோகிராம் மரவள்ளிக்கிழங்கு மற்றும் பலாக்காயின் விலை இன்று 200 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், நுகர்வோர் அதிக சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அண்மைய நாட்களாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பலாக்காய்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
இதுவரை போஞ்சி, கெரட், வெண்டைக்காய், பீட்ரூட், நோகோல், கறிமிளகாய், பாகற்காய் போன்ற காய்கறிகளின் மொத்த விலை 250 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இருப்பினும், மொத்த விற்பனை விலை இவ்வாறு பதிவு செய்யப்பட்டாலும், சில்லறை சந்தையில் விலைகள் முற்றிலும் மாறுபட்ட மதிப்பைக் கொண்டுள்ளன.
சில பகுதிகளில் ஒரு கிலோ காய்கறிகள் 250 ரூபாவுக்கு விற்கப்படுவதாக சந்தை ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலைமையானது இம்மாத இறுதிவரை காணப்படும் என்று ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.