மன்னார் மாவட்டத்தில் கச்சான் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் விதை கச்சான் வழங்கி வைக்கப்பட்டது.
இதனடிப்படையில் 30 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு,அவர்களுக்கு விதை கச்சான் 20 கிலோ வழங்கி வைக்கப்பட்டது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரப்புக்கடந்தான் மேற்கு கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கும் கச்சான் செய்கை யை மேற்கொள்ள 20 கிலோ விதை கச்சான் வழங்கப்பட்டது.
குறித்த பெண் தலைமைத்துவ குடும்பத்தைச் சேர்ந்த பத்மினி என்ற பெண் கச்சான் பயிரிட்டு தற்போது கச்சான அறுவடையை மேற்கொண்டுள்ளார்.
20 கிலோ கச்சான் விதைத்து தற்போது 200 கிலோ பச்சை கச்சானை அறுவடை செய்ய உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.