வடகொரியாவில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையும், பட்டினியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்கொலைக்கு முயல்வதைத் தேசத் துரோகக் குற்றமாக அறிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜொன் உன், அவ்வாறு முயற்சி செய்பவர்களுக்கு தகுந்த தண்டனை விதிக்கப்படுமெனவும் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.