இரகசிய ஆவணங்களை வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சட்டுக்களை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார்.
இந்நிலையில் புளோரிடாவின் மியாமி நீதிமன்றில் நடந்த விசாரணையின் பொது அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரகசிய ஆவணங்களை மறைத்து, தவறாக கையாண்டதாக ட்ரம்ப் மீது 37 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் வரலாற்றில் மிக மோசமான மற்றும் கொடூரமான அதிகார துஷ்பிரயோகத்தை காண முடிந்தது என்றும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.